வியாழக்கிழமைக்கு ஒரு தனி விசேஷம் உண்டு. ஸ்ரீ ராகவேந்திரருக்கும்¸ ஸ்ரீ சாயி பாபாவுக்கும் பூஜை/பஜன் செய்ய ஒரு சிறப்பான நாளாகும். அதே போல எனக்கும் என் குடும்பத்தாருக்கும் வியாழக்கிழமை எப்போதுமே சிறப்பான நாள். அந்நாளில் மாலை வேளைகளில் ஒரு மணி நேரத்திற்கு சாயி பஜன் செய்வோம். நாங்களே பாட்டு பாடுவோம் அல்லது டேப் ரெக்கார்டர் மூலம் பாட்டுக்களை போட்டு பஜன் செய்வோம். அப்படி கூட ஒரு சில சமயங்களில் முடியாத நிலையில் கம்ப்யுட்டரிலோ¸ டி.வி.யிலோ பஜன் பாட்டுக்களை போட்டுக்கேட்டு அமைதியாக அமர்ந்து தியானம் செய்வோம்.
சாயி பஜன் செய்யும் போது மிகுந்த உற்சாக்துடன் ஒரு மூலை முடுக்கு விடாமல் வீடு முழுதும் சுத்தம் செய்வோம். சுத்தம் எங்கு இருக்கிறதோ அங்கே கடவுள் இருப்பார் என யாரோ சொல்லக் கேள்வி பட்டிருக்கிறேன். கந்;தையானாலும் கசக்கி கட்டு என்பதையும் படித்திருக்கிறோம். அதனால் இந்த பஜன் நாட்களில் சுத்தமாகவும் அந்த அறையை மிகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வீட்டில் உள்ள அனைவரும் சுத்தம் செய்வதில் ஈடுபடுவார்க்ள்.
நன்றாக சிந்தித்து பார்த்தால் வீட்டை சுத்தம் செய்கிறோம் என நாம் சொல்லும் அந்த வார்த்தைக்கு அது உண்மையான அர்த்தம் அது அல்ல. அவ்வாறு வீட்டை சுத்தம் செய்யும்போது நம் மனதும்¸ எண்ணங்களும்¸ செய்கைகளும் பக்குவப்பட்டும¸; சுத்தப்பட்டும்¸ மேலும் மேன்மையடைகிறது என்பதுதான் சுத்தத்திற்கு உண்மையான பொருள். நம் மனதை மேன்மைபடுத்திக்கொள்ள பல வழிகள் ஆண்டவன் நமக்கு கொடுத்திருக்கிறார். இதில் தியானம் மற்றும் கூட்டாக பாடுவது என்ற பல நிலைகள்.
இந்த பஜன் முடித்ததும் அடுத்த வாரம் வரைக்கும் ஒரு மகிழ்ச்சியான நான் இருப்பதை உணர்ந்திருக்கிறேன். இதை ஆங்கிலத்தில் எiடிசயவழைn ஃ யரசய என்பார்கள். இதனால் வியாழக்கிழமைகளில் சாயி பஜன் செய்வதை நான் 10 வயதிலிருந்தே கடை பிடித்து வருகிறேன். அதாவது ஒரு 50 வருடங்காளக சாயி பஜன் செய்து வருகிறேன். நேற்று பஜன் செய்ததில் ஒரு விசேஷம் இருந்தது. என்னுடைய மைத்துனரின் ஒரு 6 மாத குழந்தைக்கு திடீரென உடலுக்கு பிரச்னை வந்து விட்டது. யாருமே சற்றும் எதிர்பார்க்காத ஒன்று. உடனடியாக பக்கத்திலுள்ள பெங்களுரில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று சொல்லி விட்டார் உள்ளுர் குடும்ப மருத்துவர். ஒரு நொடியில் குடும்பத்திலுள்ள அமைதி எல்லாம் பறந்து விட்டது. எல்லோருடைய மனதிலும் ஒரு இறுக்கம் ஏற்பட்டு விட்டது. குழந்தையை தூக்கிக்கொண்டு பெங்களுருக்கு எல்;லோரும் பறந்து விட்டார்கள். நானும் என்னுடைய இரண்டாவது மகள் மட்டுமே இருந்தோம். குழந்தைக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாதே என்ற கவலையே மேலோங்கி நின்றது. உள்ளுர் டாக்டர் ஏதேதோ சொல்லி பயமுறுத்தி விட்டிருந்தார்.
பஜனைக்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தோம். அழகான முறையில் சாயி பஜனைப் பாடல்களை திருமதி பி.சுசீலாவும்¸ சித்ராவும்¸ மும்பையிலுள்ள திரு சோனு நிகாமும் பாடியவற்றை கம்ப்யுட்டரில் வைத்துள்ளதை ஒரு இரண்டு மணி நேரம் போட்டு¸ சில பாடல்களை அதனுடன் பாடினோம். மனதிலுள்ள இறுக்கம் குறைந்தது. நல்ல செய்தியே வரும் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக வரத் தொடங்கியது. அல்;லது நம்முடைய பாரத்தை கடவுள் மேல் போட்டு விட்டு அவர் பார்த்துக் கொள்வார் என்ற மனப்பக்குவம் நம்முள் ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன். அதேபோல இரண்டு மணி நேரம் கழித்து குழந்தைக்கு செய்த எல்லா டெஸ்டுகளிலும் கவலைப்படும்படி எந்த பிரச்னையும் இல்லை என செய்தி பெங்களுர் மருத்துவ மனையிலிருந்து என் மனைவி தொலைபேசி மூலம் சொன்னார். நம்பிக்கை¸ நிம்மதி என்பதற்கான உண்மையான அர்தத்தை இதைப்போல தருணங்களில்தான் இறைவன் நமக்கு உணர்த்துகிறார்.
இதைப்போல கடினமான சந்தர்ப்பங்களை நூற்றுக்கணக்கான தடவைகள் என்னுடைய வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறேன். பாபாவை நினைத்து அவர் பார்த்துக்கொள்வார் என அவரிடமே விட்டு விடுவேன். எல்லா நிலைகளிலும் அவருடைய அருள் எனக்கு கொடுத்துள்ளதை நான் நன்கு அறிவேன். அதையெல்லாம் இங்கே எழுதவேண்டும் என நான் நினைக்கவில்லை. பாபாவை பற்றி கோடிக்கணக்கானவர்கள் பேசியிருக்கிறார்கள்¸ இன்னும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்¸ எழுதியிருக்கிறார்கள்¸ அதுவே போதும்.
1960களில்¸ என்னுடைய சிறிய வயதில் எங்கள் வீட்டிற்கு வரும் பலரும் சாயி பாபாவை பற்றியும் அவர் மக்களுக்காக ஆற்றி வரும் தொண்டினையும் பலவாறு சொல்லி சொல்லி வியப்படைவார்கள். பலர் பலவிதமான உடல் உபாதைகளாலும்¸ மருத்துவர்களால் கைவிடப்பட்டபின் புட்டபர்த்தி (பாபா பிறந்த இடம்) சென்று அவரை வணங்கி¸ தங்களுடைய குறைகளை சொல்லி தங்களுடைய எல்லா பிரச்னைகளும் கண் இமைக்கும் நேரத்;தில் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்தி இன்று நல்லபடியாக வாழ்ந்ததை பார்த்திருக்கிறேன். அவரின் இதைப்போல உதவிகளை பெரு மகிழ்ச்சியாக சொல்லிக்கொள்வதை கேட்டு¸ மிகுந்த அளவில் வியப்படைந்தேன். அது மட்டுமல்ல¸ உடலளவில் பெரும் குறைகளை அனுபவத்து வந்து பிறகு பாபாவை தரிசித்து வந்தபின் அவர்களுடைய அந்த உடல் உபாதைகள் அறவே நீங்கி நல்லபடியாக ஒரு சில மாதங்களில் வாழத் தொடங்கியதை நான் கண்ணார கண்டபின் பாபாவின் மேல் ஒரு தனி பக்தி என்னுள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உணரத் தொடங்கினேன். பாபா கிருஷ்ணகிரிக்கு 2 முறை வந்திருக்கிறார். அவருடைய பக்தர் ஒருவர் பாபாவை எங்கள் ஊருக்கு அழைத்து வந்திருந்தார். அந்த சமயத்தில் நானும் அங்கு சென்றேன். பாபாவை மிக மிக அருகில் கண்ட பாக்கியம் எனக்கு கிடைத்தது. எங்களிடம் அவர் மிகவும் அன்பாக பேசினார். நல்லதையே நினையுங்கள் நல்லதே நடக்கும் என்பதை அடிக்கடி சொல்லி எல்லோருக்கும் நம்பிக்கையையும்¸ உற்சாகத்தைதயும் ஊட்டி சென்றார்.
நல்லது செய்பவர்கள் எல்லோருமே கடவுள் என்ற கொள்கை உடையவன் நான். எந்த வித பலனும் எதிர்பாராமல் பிறருக்கு உதவி செய்து வருபவர்களை தினமும் நான் காண்கிறேன். நல்லது செய்யத்தானே கடவுள் இருக்கிறார் ! ஆக நம் முன் ஆயிரக்கணக்கான கடவுள்கள் இன்னமும் வசித்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால்தான் பாபாவை அவர் வாழந்த காலத்தில் வாழும் கடவுளாக கண்டார்கள். இன்றும் பாபா நம்முடன் இருக்கிறார்¸ என்றும் பாபா நம்முடன் இருப்பார் ….. இதுதான் என் நம்பிக்கை¸ கோடிக் கணக்கானவர்களின் நம்பிக்கை. நல்ல நம்பிக்கைகள் நிச்சயம் வீண் போவதில்லை. எது நமக்கு¸ எந்த தருணத்தில் கொடுக்க வேண்டும் என்பது கடவுளுக்;;கு தெரியும்;; என்ற நம்பிக்கையும் நமக்கு என்றென்றும் வேண்டும். ஆண்டவனிடம் கையேந்தி நிற்க தேவையே இல்லை.
After all our faiths can move the mountains!
Comments